களனி எனக்கும் வேண்டாம்.... - பெஸில்
இலங்கை சுதந்திரக் கட்சியின் களனி அமைப்பாளர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஸில் ரோஹன ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் கமிட்டியின் மூலம் சில காலம் களனி அமைப்பாளராக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
கம்பஹா மாவட்டத்தின் அபிவிருத்திக் கமிட்டியின் தலைவராக இருப்பவர் பெஸில் ராஜபக்ஷ.
பெஸில் ராஜபக்ஷ களனித் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும் பெஸில் ராஜபக்ஷவுக்கு களனித் தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்குமாறு பிரதேச விகாரைகள் பலவற்றின் விகாராதிபதிகள் பலரும் மாகாண நிருவாக சபைகளின் உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளனர்.
களனிப் பிரதேச சபை உறுப்பினர் ஹஸித்த மடவல கொலை செய்யப்பட்டு சில வாரங்களின் பின்னர் களனித் தொகுதியின் இலங்கை சுதந்திரக் கட்சி அமைப்பாளராகவிருந்த மர்வின் சில்வா தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துகொண்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment