Tuesday, February 26, 2013

சிங்கத்தின் கோட்டையில் சண்டைபோடத் தயாராகும் செம்சுங் நிறுவனம் - சாதனைக்கு வருகிறது கெலக்ஸி எஸ்-4

செம்சுங் கெலக்ஸி எஸ் வகைப் போன்கள் சாதனை படைத்துள்ள மீண்டும் ஒரு சாதனைக்கான அழைப்பை கெலக்ஸி நிறுவனம் விடுத்துள்ளது. செம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ் எஸ் 2 எஸ் 3 ஆகிய மாதிரிகள் விற்பனையில் சாதனை படைத்தவை.செம்சுங் கெலக்ஸி எஸ் வரிசையில் இறுதியாக வெளியாகியது எஸ் 3 இதுவும் முன்னையை வெளியீடுகளைப் போல நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் புதிய தனது போனிற்கான அழைப்பை சம்சங் விடுத்துள்ளது.

தற்போது செம்சுங்கின் காலம் கனிந்து விட்டது. ஆம் செம்சுங் அடுத்த கெலக்ஸி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இது கெலக்ஸி எஸ் 4 ஆக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த அறிமுக நிகழ்வு மார்ச் மாதம் 14 ஆம் திகதி நிவ்யோர்கில் இடம்பெறவுள்ளது.இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ்களையும் செம்சுங் அனுப்பியுள்ளது.

எனவே இன்னும் சில வாரங்களில் செம்சுங் கெலக்ஸி எஸ் 4 எப்படி இருக்கப்போகின்றது என்ன தொழிநுட்ப அம்சங்களை உள்ளடக்கியிருக்கப்போகின்றது என தெரிந்து விடும்.

இதேவேளை சுமார் 3 வருடங்களின் பின்னர் செம்சுங் சுமார் தனது ஸ்மார்ட் போனொன்றிற்கான அறிமுக நிகழ்வை அமெரிக்காவில் நடத்தவுள்ளது.

அப்பிள் எனும் சிங்கத்தின் கோட்டையான அமெரிக்காவில் இது நடைபெறுகின்றமை இந்நிகழ்விற்கு கூடிய சிறப்பு சேர்க்கின்றது.குறிப்பாக அப்பிள் மற்றும் செம்சுங் இடையிலா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்நிகழ்வு அங்கு இடம்பெறவுள்ளது.

பல தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இதனை நடத்துவதாக செம்சுங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com