Friday, February 15, 2013

338 ஒட்டங்களுக்குள் அடங்கிய பாகிஸ்தான் அணி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 338 ரன்களில் ஆட்டம் இழந்ததுள்ளது. தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் நேற்று கேப்டவுன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்யப்பட்டது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹபீஸ் 17, ஜாம்ஷெட் 3, அசார் அலி 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் வந்த யூனிஸ்கான், ஆசாத் ஷபிக் ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டது. இவர்கள் விக்கெட்டை தென்ஆப்பிரிக்க வீரர்கள் வீழ்த்த மிகவும் சிரமம் பட்டனர்.

யூனிஸ்கான் மற்றும் ஆசாத் அலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். முதல்நாள் ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்களுக்குமுன் யூனிஸ்கான் 111 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஷர்பிராஷ் அகமத் களம் இறங்கினார். முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்திருந்தது. ஆசத் ஷபிக் 111 ரன்களுடனும், ஷர்பிராஷ் அக்மத் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. 111 ரன்களுடன் இருந்த ஆசாத் ஷபிக் மேலும் ரன்ஏதும் சேர்க்காமல் பிளான்டர் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அகமத் 13 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தன்வீர் அக்மது 44 ரன் சேர்க்க பாகிஸ்தான் 338 ரன்களில் ஆட்டம் இழந்தது. தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் பிளான்டர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com