Saturday, January 26, 2013

தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக மாறிய கதையை அமெரிக்க பிரதிநிதிகளுக்கு சொன்னோம்- சம்பந்தன்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி நாடு சுதந்திரம் பெற்ற நாட்தொடக்கம் இன்று வரை இடம்பெற்று வருகின்ற அநீதிகள், துயரங்கள், அறவழியில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அன்று நடத்திய போராட்டங்கள், அது பின்னர் ஆயுதப் போராட்டமாக மாற வேண்டிய நிர்ப்பந்தங்கள் தொடர்பாக இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர்மட்டக்குழுவிடம் விபரமாக எடுத்துக் கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக்குழவினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதிப் போர், முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரும் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களை பறிகொடுத்து பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமரமுடியாமல் பாரம்பரிய பிரதேசங்களை பெரும்பான்மை இனத்திடம் பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர்.

எல்லாரும் கைவிட்ட நிலையில் அனாதரவாக வாழ்கின்ற அவல நிலை பற்றியெல்லாம் அமெரிக்கத்தூதுக்குழுவின் முன்னால் ஆதாரபூர்வமாக முன்வைத்தோம் என்றார்.

3 comments :

Anonymous ,  January 26, 2013 at 7:46 PM  

How many times you said that you had given wonderful explanations to the whole world about the political situations.Why not you try to finish up this matter within the boundary of Srilanka.A matter inside your family to be settled within your family limits.We are deeply sorry for the repeated bullshit stories

ARYA ,  January 26, 2013 at 9:54 PM  

USA known already about matter in Sri Lanka, because many Tamil, singalese, Muslim politicians and NGO and also some catholic priest are spions of CIA and they give regular secret and public statements against Sri Lanka.

Anonymous ,  January 27, 2013 at 3:24 AM  

திரும்பத் திரும்ப புளித்துப் போன கதைகளை சொல்லி மற்றவர்களை மேலும் சளிப்படைய வைக்காமல்,
தமிழ் மக்களின் தற்போதைய பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்பனவற்றை விளக்கி கூறுவதே மிக முக்கியம். சுயநலத்தை விட்டு பொதுநல சிந்தனையுடன், ஒரு யதார்த்த பூர்வமான தீர்வை நோக்கி தற்போதைய தமிழ் தலைமைகள் செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகிறது.
Don't be ignorance any more.
Don't miss any single chance.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com