இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு பெண் இராணுவ வீரர் காயம்
யாழ். அச்செழு இராணுவ முகாமில் இருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண் இராணுவ வீரர் ஒருவர் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 511 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 35 வயதுடைய சுனித்தி என்ற சிப்பாயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது தவறுதலாக இடம்பெற்ற ஒன்று என பலாலி இராணுவ தலைமைப் பீடம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment