அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது ?
இலங்கையின் அமைச்சரவையில் அடுத்து வரும் கிழமைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகத் அரசாங்க உயர் மட்டங்களை சுட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பொதுநிர்வாகம், மின்வலு மற்றும் எரிசக்தி, பெற்றோலிய வளம் உள்ளிட்ட சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
குறிப்பாக இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப்பதவிகளோ, பிரதி அமைச்சுப் பதிவிகளோ வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment