மட்டக்களப்பில் மீண்டும் கடும் மழை, தாழ்நிலப்குதிகளில் வெள்ளம் பல குடும்பங்கள் இடம்பெயர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்ம் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதோடு தாழ் நிலங்கள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு மீட்புப் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பில் மழை பெய்து வருகின்றது.
நேற்று வியாழக்கிழமை காலை தொடக்கம் இன்று காலை 5. 30 மணிவரை 145.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.
கடும் மழை காரணமாக மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்துப்பாதை,வெல்லாவெளி –காக்காச்சிவட்டைக்கான போக்குவரத்துப்பாதை ஆனைகட்டியவெளியூடான போக்குவரத்துப்பாதை என்பன துண்டிக்கப்பட்டுள்ளன.
நவகிரிக்குளத்தின் ஒரு வான்கதவு 4 அடி திறந்து விடப்பட்டுள்ளது தாழ் நிலங்களில் வசித்த மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பணிகள் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக் விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத்த திலகரட்ன இதற்கான பணிகளில் நேரடியாக ஈடுபட்டார்.
0 comments :
Post a Comment