Wednesday, January 16, 2013

பிரதம நீதியரசரை எவ்வாறு பதவி நீக்கினோம் என சபாநாயகரே கூறிவிட்டார்- அவருடன் நாங்களும் இணைகிறோம் சுமந்திரன் எம்.பி

பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தொடர்பாக பாராளுமன்றில் நடைபெற்ற விடயங்களின் போது சபாநாயகர் என்ற வகையில் தான் மிகவும் கஷ்டமானதொரு காலகட்டத்தினூடாகச் தான் சென்றதாக சபாநாயகர் கூறியுள்ளதுடன், தற்போது எம்மோடுள்ள இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டுமென்ற விடுத்த கோரிக்கையை நாங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும் ஆதரிக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


கொழும்பிலுள்ள அஸாத் சாலி பௌண்டேஷனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்கும் நடவடிக்கை நடந்தேறிய கையோடு, அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கருத்து கூறியுள்ளது. பதவி விலகல் எவ்வாறு நடந்தேறியுள்ளது என்பதை தெளிவு படுத்துகிறது.

பிரதம நீதியரசரின் பதவி விலக்கல் நேர்மையான முறையில் நடக்கவில்லையென்;பது அவருடைய கருத்து மூலம் எங்களுக்கு புலனாகின்றது. எனவே பிரதம நீதியரசரின் பதவி விலக்கலை நாங்களும் எதிர்க்கின்றோம். என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com