Monday, January 21, 2013

ஸவுதியில் கொலை செய்யப்பட்டது சிங்கள யுவதியாக இருந்திருந்தால், இன்று முஸ்லிம்களின் வீடுகள் தீக்கிரையாகியிருக்கும்... - இதுதானோ உண்மை?

முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக இந்நாட்களில் இயக்கங்கள் சிலவற்றினால் இனவாதப் பிளவினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவசரமாக நிறுத்தாதவிடத்து இலங்கைக்குள் மீண்டுமொரு இனவாதப் பிரச்சினை மேலேழும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாபதி உள்ளிட்ட அரசின் முக்கிய பிரமுகர்களுக்குஅறியக்கொடுத்துள்ளது.

இனவாதத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த முஸ்லிம் எதிர்ப்புச் சக்தி பற்றி சமயப் பண்பாட்டலுவல்கள் அமைச்சு மூலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தெரிவித்தார்.

இந்த இனவாதக் குழுபற்றி மிக விரைவில் ஆய்வு மேற்கொள்ளுமாறும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஸவுதி அரேபியாவில் ரிஸானா நபீக்கிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, இந்நாட்டு சிங்கள யுவதி ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் இன்று நமது முஸ்லிம் சமுகத்தினரின் வீடுகள் தீப்பற்றி அழிந்திருக்கும் என்ற கருத்தை வெளிக்கொணர்ந்துள்ள அவர், இனவாத சக்திகள் நாட்டில் இருப்பது மிகவும் ஆபத்தானது என்றும் குறிப்பிட்டார்.


(கலைமகன் பைரூஸ்)

2 comments :

Anonymous ,  January 21, 2013 at 12:26 PM  

Mulim Singhalese or tamil is not the question,a precious human life would have been saved by the authorities but this very unfortunate event happened due to lack of efforts.Extremely Sorry for the sorrowing family.

கரன் ,  January 21, 2013 at 1:03 PM  

இப்ப முஸ்லிம்களுக்கு அடி போடவில்லை என்றது இவங்கட பிரச்சினை போல் கிடக்குது. அப்படி போட்டிருந்தால் ஹிஸ்புல்லா ஒருபக்கம் அடித்தவங்களுக்கு நிவாரணம் வேணும் என்று அரபு நாடுகள் முழுத்திலையும் வாங்கி காத்தான்குடிக்கு அடுத்ததாக ஏறாவூர் ,ஓட்டமாவடி, கல்முனக்குடி என தனியார் வங்கிகளை திறந்து தன்ன பிஸினசை பெருக்கியிருப்பார்.

மறுபக்கம் சிங்களவன் எங்கட ஆள்கொல்லுறத்துக்கு ஆணை வழங்கயிருக்கிற சரியாவை மதிக்கலை என்று ஆர்ப்பாட்டம் செய்திருப்பானுகள் எல்லாம் பிழைத்து போட்டுது.

இப்ப என்ன அடியாவேணும் . அடித்தாலும் தப்பு அடிக்கா விட்டாலும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com