Tuesday, January 15, 2013

வாடகை மனைவிகள்: அரபு நாட்டுக்காரர்களுக்கு விருந்தாகும் இந்தியப் பெண்கள்!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா செல்வோருக்கு நாட்கணக்கில் இந்தியப் பெண்களை விலைபேசும் கும்பல் அதிகரித்து செல்கின்றது என அந்நாட்டு ஊடகம் ஒன்று விசனம் வெளியிட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத் நகரங்களில் இதுபோன்று வாடகைக்கு மனைவிகளை ஏற்பாடுசெய்யும் கும்பலை கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளது மிட்டே நாளிதழ். அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் ஷேக்குகள் தங்களின் தேவைக்காக இந்தியப் பெண்களை திருமணம் கொள்கின்றனராம்.

இந்தியாவில் இருக்கும் வரைக்கும் அந்தப் பெண்களை அனுபவித்துவிட்டு பின்னர் உடனடியாக விவாகாரத்து செய்துவிட்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். மிட்டே நாளிதழின் பெண் நிருபர் கிராந்தி விபுதேயும் ஆண் நிருபர் பூபன் படேலும் ஒரு மாதத்திற்கும் மேலாக உளவு பார்த்து அரபு ஷேக்குகளின் இந்த லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.

பெண் தேடும் படலம்

இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் செல்லும் அரபு நாட்டு ஆண்கள் சிலர், மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையிறங்கியதும் பெண் தேடும் படலத்தை தொடங்கி விடுகின்றனர். அதற்காகவே உள்ள சில புரோக்கர்கள் அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு பெண்களை கூட்டி செல்கின்றனராம்.

முறைப்படி திருமணம்

தங்களுக்கு பிடித்தமான அழகான பெண்களை தேர்வு செய்யும் ஷேக்குகள் மத முறைப்படி திருமணம் செய்து கொள்கின்றனராம். பெண்ணை தேர்வு செய்த உடன் ரூ.15 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பேசப்பட்டு பெண்ணுக்கு கைமாறி விடுகிறது. எத்தனை நாட்களுக்கு ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்ட பின் ஷேக்கினால் கசக்கிப் பிழியப்படுகின்றனராம்.

இந்தியாவில் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லும் ஷேக், தன் தேவைக்கு ஏற்ப விருப்பம் போல அந்த பெண்ணை பயன்படுத்துகிறனராம்.

பெண்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஏஜன்டுகள்

பெண்ணுக்கென ஷேக் வழங்கும் பணத்தில் அவளுக்கு கொஞ்சம் பணமே கிடைக்கின்றதாம் 50 சதவீத பணத்தை திருமணம் மற்றும் விவாகரத்தை செய்து வைக்கும் மதகுரு எடுத்து கொள்கிறார். மீதமுள்ளதை பெண்ணும் அவளை, ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.

உடனடியாக விவாகரத்து விசா காலம் ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ முடியும் போது திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து விவாகரத்தும் செய்து விடுகிறார். விவாகரத்தும் சில வினாடிகளில் முடிந்து விடுகிறது. குறிப்பிட்ட காலம் மட்டும் அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண் இறுதியில் காகிதம் போல கசக்கி வீசப்படுகிறாளாம்.

1 comments :

Anonymous ,  January 21, 2013 at 12:55 PM  

மேலே உள்ள கட்டுரையில் உள்ளவை உண்மையானவையே!
ஆனாலும் இந்தியாவின் வாடகை மனைவியாகும் மக்கள் யார் என்பதை கட்டுரையாளர் எழுதவில்லை.

இந்தியாவில் வாழும் இஸ்லாமிய சமூகத்திலிருந்தே இந்த வாடகை மனைவிகள் தேர்வாகி ; பாலியல் பலாத்காரம் நிறைந்த விபச்சாரத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்தியாவில் வாழும் இந்துகளோ அல்லது கிறிஸ்தவர்களோ இப்படி சில தினங்களில் திருமணம் செய்ய அனுமதியளிக்கப்படுவதில்லை.

இந்துக்கள் சாதாரணமாக சாமி படத்துக்கு முன் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டாலும் அல்லது ஒரு கோவிலில் போய் அர்ச்சகர் உதவியோடு திருமணம் செய்து கொண்டாலும் விவாகரத்து என வரும் போது உடனடியாக விவாகரத்தை பெற முடியாது.

இந்தியர்களின் இந்துக்களின் பதிவுத் திருமணம் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் வெளிநாடு செல்ல வேண்டி பதிவுத் திருமண சான்றிதழுக்காக திருமணம் செய்வோர் தவிர்த்து அதிகமாக காதலித்து ஓடிப் போவோரே பிரச்சனைகளில் இருந்து தப்ப பதிவுத் திருமணம் செய்து கொள்கின்றனர். இத் திருமணங்களின் போட்டோ ஒன்றை அல்லது மஞ்சல் கயிறை வைத்தே விவாகரத்து உடனடியாக கிடைக்காது.

இந்தியாவில் வாழும் கிறிஸ்த்தவர்கள் பதிவுத் திருமண சான்றிதழை வழங்கிய பின்னரே கோவில் திருமணத்தை நடத்த வழி விடும். எனவே விவாகரத்தும் பிரிந்த வாழந்து நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின்னே விவாகரத்து கிடைக்கும்.

இந்திய இஸ்லாமியருக்கு மட்டுமே ஒரு இஸ்லாமிய மத குருவை வைத்து எங்கு வேண்டுமானாலும் திருமணம் ஒன்றை நடத்த முடியும். அது வீடாகவோ அல்லது விடுதியாகவோ அல்லது எங்காவதோ இருக்கலாம்.

அதேபோல தலக் தலக் தலக் என 3 முறை சொல்வதன் மூலமும் ஒரு சில நொடிப் பொழுதில் விவாகரத்து அல்லது பிரிந்து செல்ல முடியும். மேலே உள்ள கட்டுரையில் இதையும் இணைத்திருக்கலாம்.

நான் இந்தியாவின் விடுதிகளுக்கு உல்லாசப் பொழுதைக் கழிக்க வரும் அரேபிய சேக்குகளின் இந்த விபச்சார நாடகத்தை கண்டுள்ளேன். இவற்றுக்கு பெற்றோரும் அவர்களோடு இணையும் பெரியோரும் தரகர்களாகவும் உடந்தையாகவும் செயல்படுகின்றனர். இதை இந்திய போலீசாரும் கண்டு கொள்வதில்லை என்பது மற்றுமொரு சோகம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com