கமலின் விஸ்பரூபத்தை திரையிட இலங்கையில் தடை அமைச்சர் கெஹலிய- இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீதிமன்றினால் நீக்கம்?
கமல் ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதை தற்காலிகமாக தடைவிதித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.இத்திரைப்படம் திரைப்பட தனிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தமிழக அரசினால் நேற்று விஸ்வரூபம் திரைப்படம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தலைவர்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசினால் 15 நாட்கள் தடை செய்யப்பட்டிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை சென்னை உயர் நீதிமன்றம் சற்று முன்னர் மீளப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் உத்தியோகபூர்வமற்ற தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை தவிர்ந்த ஏனைய உலக நாடுகளில் விஸ்வரூபம் வெளியிடப்படும் என தற்போது தெரிவிக்கப்படுகிறது
0 comments :
Post a Comment