Monday, January 14, 2013

நான் வருவேன்! - நீதிமன்றத்திற்கு தகவல் அனுப்பினார் சிராணி

குற்றப் பிரேரணை மூலம் பதவி விலக்கப்பட்டுள்ளதாகக் கூறி முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கு ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அதிகாரப் பத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் முன்னாள் நீதியரசர் சலனம் அடைந்துள்ளார்.

விஜேராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு, அந்த பத்திரத்தை கொண்டுசென்ற பொலிஸ் அதிகாரியிடம் அவர், ‘உத்தியோகத்தர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று கூறியுள்ளார். பொலிஸ் அதிகாரி அதுபற்றித் தொடர்ந்து தெளிவுறுத்தியதன் பின்னரேயே அதனை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன்பின்னர், இரண்டு மணி நேர அளவு, நீலகாந்தன் மற்றும் நீலகந்தன் கம்பனியினர், ரொமேஷ் த சில்வா உட்பட அவரின் வழக்கறிஞர்களுடன் இதற்குப் பின்னர் செய்யவேண்டிய திட்டங்கள் பற்றி கலந்துரையாடி இருக்கிறார். சில நேரங்களில் அவர் ஏனைய நாட்களை விட அதிக சத்தமிட்டு கதைத்திருக்கிறார். திட்டித் தீர்த்திருக்கிறார்.

அந்த உரையாடலின் பின்னர் அவர், பொலிஸ் மா அதிபரிடம் தனக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பாதுகாப்புப் பெற்றுத்தருமாறும் கோரியுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தான் நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு வரவுள்ளதாக அங்குள்ள அதிகாரிகளிடம் முன்னாள் நீதியரசர் அறிவித்திருக்கிறார். புதிய நீதியரசருக்கு பதவியை வழங்குவதற்காக தான் வருகை தரவுள்ளதால் அதற்கு ஆயத்த நிலையில் இருக்குமாறு அவர் புதுக்கடை நீதிமன்ற உத்தியோகத்தர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், செவ்வாய்க் கிழமை முன்னாள் பிரதம நீதியரசர், அவர் நீதிமன்றத்தில் கடமையாற்றிய உத்தியோகபூர்வ இடத்திற்கு வந்து, அங்கிருந்து போகாமல் அரசாங்கத்தை பிரச்சினைக்குட்படுத்தும் செயற்பாடுகளைச் செய்வதற்கான சூட்சுமங்களைச் செய்யவிருப்பதாகவே அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.


(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com