Friday, January 18, 2013

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகரான இராணுவச் சிப்பாய்- வானொலியில் பிரபாகரனின் புகழ்பாடிய பெண்ணால் பெரும் பரபரப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சியின் எந்தவிதமான சீர்கேடுகளும் இடம்பெற்றிருக்காது என கடந்த தைப்பொங்கல் தினத்தில் சூரியன் எவ்.எம் நடத்திய வானொலி நிகழ்ச்சியில் பெண்ணொருவர் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு வானொலி அறிவிப்பாளர்களும் திக்குமுக்காடிப்போன சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் கலாசாரம் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றதா' என்ற கருப்பொருளில் குறித்த வானொலி நேரடி ஒலிபரப்பு ஒன்றை செய்தது. இதன்போது வவுனியாவிலிருந்து பேசுவதாகத் தொடர்புகொண்ட பெண்ணொருவர் தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடுகள் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்படுகிறது என்று கூறினார்.

இதன் பின்னர் ஒரு உதாரணக் கதையும் அவர் சொன்னார். அதில் பாடசாலை செல்லும் வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவன் மாமரம் ஒன்றுக்கு அருகில் ஒழிந்து நின்று சிகரெட் புகைத்த போது அவ்வழியால் சென்ற சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவன் அங்கே வந்து அந்த இளைஞனை அடித்துள்ளார்.

அடிக்கும்போது 'இந்த வயதில் சிகரெட் புகைக்கிறாயோ? பிரபாகரன் இல்லாத குணத்தைக் காட்டுகிறாயா? பிரபாகரன் இருந்தால் இன்று இப்பிடிச் செய்வாயா?' என்று கேட்டு அடித்ததை தான் கண்டதாகத் தெரிவித்தள்ளார்.

குறித்த பெண்ணின் இந்தக் கருத்தால் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் செய்வதறியாது திகைத்து வாயடைத்து நின்றனர்.

அத்தோடு சீரழிவுகளை இலங்கை இராணுவத்தினர் பார்த்துக் கொண்டிருக்கவில்லையென்ற செய்தியையும் அப்பெண் தன்னை அறியாமலே சொல்லிச் சென்றுள்ளார்.

1 comments :

ஆரியா ,  January 19, 2013 at 10:05 AM  

இராணுவச் சிப்பாய் கேட்டது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.
" பிரபாகரன் இருந்திருந்தால் புலிகள் சிகரெட்டுக்கு வரி விதித்திருப்பார்கள் , மாணவனாகிய உன்னால் அதிக விலை கொடுத்து வாங்கி புகைக்க முடியாது என்ற அர்த்தத்தில் இராணுவச் சிப்பாய் கேட்டிருப்பார் " இதை புலிசார் ஊடகங்கள் பெரிது படுத்தி உள்ளன.
வெளிநாடுகளில் புலி கொடி பிடித்து மஞ்சள் சிகப்பு உடை உடுத்தி திரிந்த கவட்டை விரித்து ஆடிய பெட்டையள் இப்ப வெள்ளைக்காரன்களோடு ஆடும் கூத்துகளை யார் கேட்பது ?

ஆரியா

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com