அரசியல் செய்வோம் வாருங்கள்’ சிராணியை அழைக்கிறார் பொன்சேக்கா
அரசாங்கத்தின் தப்பான தீர்ப்பும் முடிவும், தான் அரசியலில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைந்ததென்றும், இன்று அவ்வாறுதான் முன்னாள் பிரதம நீதியரசருக்கும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடும் சரத் பொன்சேக்கா, நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பதற்காக, மக்களுக்காக முன்னாள் நீதியரசருடன் சேர்ந்து தான் பயணிக்கவும் தயார் என்று குறிப்பிடுகிறார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நான் இன்று அரசியலில் ஈடுபடக் காரணம் அரசாங்கத்தின் பிழையான தீர்ப்பாகும். எனக்கு ஏற்பட்ட மாதிரி இன்று முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதற்காக அவருடன் இணைந்து பயணிக்கத் தான் தயாராக இருக்கிறேன். நாடு இன்று சகல வழிகளிலும் குட்டிச் சுவராவதற்கு ஆரம்பித்துள்ளது. மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். எனது அரசியல் பயணத்தில் பாதாள உலகத்தினர், போதைவஸ்து விற்பனை செய்வோர், கொல்லையர்களுடன் தொடர்பு வைத்திருப்பதற்கோ, ஏகாதிபதியாக வாழ்வதற்கோ எந்தத் தேவையுமில்லை. அவை என்னில் இல்லை என்பதனால்தான் ‘ நீ அரசியல் செய்தவற்கு தகுதியற்றவன்’ என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இந்நாட்டின் ஜனநாயகத்தை விரும்பும், அதற்காக தொழிற்பட விரும்பும் எந்த ஒருவருடனும் தான் கைகோத்துக் கொள்வதே எனது அரசியலாகும்’. என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment