Thursday, January 24, 2013

இடது காலிற்கு பதிலாக வலது காலில் சத்திரசிகிச்சை செய்த யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள்.-படங்கள் இணைப்பு

சத்திரசிகிச்சையென்றிற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்ற சிறுவன் ஒருவனின் காலை மாறி சத்திரசிகிச்சை செய்து சிக்கலில் சிக்கியுள்ளனர்; யாழ்,போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள். இச்சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 15ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த தி.கயலக்ஷன் வயது 9 என்ற சிறுவனுக்கே கால் மாறி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடது காலிலுள்ள கட்டியென்றை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளச் சென்ற சிறுவனுக்கு வலது காலில் வைத்தியர் சத்திரசிகிச்சை செய்துள்ளார்.

சத்திர சிகிச்சை முடிந்து விடுதிக்கு மீண்டும் பிள்ளையை மாற்றியபோது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய இடது காலுக்கு பதிலாக வலது காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இது தொடர்பில் வைத்தியர்களுக்கு அறிவித்து உடனடியாகவே மீண்டும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிறுவனின் கட்டி அகற்றப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ தவறுகளுக்கு எதிராக குரல் கொடுத்த திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறிக்கு எதிராக யாழ்.போதனா வைத்தியர்கள் போர் கொடி துர்க்கியுள்ளதோடு மருத்துவ தவறுகள் இடம்பெறவில்லையென்றும் தெரிவித்திருந்தனர்.

இப்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் என்ன சொல்லகிறார்கள்...?


4 comments :

Anonymous ,  January 24, 2013 at 5:49 PM  

டாக்டர் என்ற படிப்பு மட்டும் போதாது. பொறுப்புணர்ச்சி, கடமையுணர்வு, சேவை மனப்பான்மை போன்ற நற்பண்புகளும் இருக்க வேண்டும். முக்கியமாக நாம் எமது மக்களையே அலட்சியம் செய்தால் எவர் எங்களை ஆதரிப்பார்கள்? தமிழினம் திருந்துவதற்கு பாரிய இடமுண்டு.

Anonymous ,  January 24, 2013 at 6:54 PM  

What a precious job.It needs a lot of responsiblities as the worthy lives in the hands of doctors,but the irresponsible behaviour of the particular surgeon and the ward doctor to be taken into serious consideration.They also should think
how the minor staff would give more weight to their irresponsible behaviour just following the irresponsible behaviour of the doctors.Threatning the coroner is not the matter.Ministry of health should take immediate action to punish the docotrs concern.Let it be a good lesson for the entire lot who serve in hospitals.

Guna ,  January 25, 2013 at 6:32 AM  

இவனுகளெல்லாம் எங்க டாக்டர் படிப்பு முடிச்சவனுகளாம்? இவனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தவனுக்கு முதலில் மண்டையில் ஆப்பரேன் செய்ய வேண்டும்

இவனுடைய இந்த வேலை மனைவிக்கு பதிலாக பிள்ளையுடன் உடலுறவு கொள்வதற்கு ஒப்பானதாகும்

இவ்வாறான போலி டாக்கர்களை நிப்பாட்டி வைத்து நெத்தியில் சுட வேண்டும் -கஸ்மாலங்கள்

Anonymous ,  January 25, 2013 at 10:10 AM  

Just swing the stethoscope walking around is not the matter,please do concentrate your minds in your devoted profession,as the sickly patients have no other alternative.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com