அம்பாறையில் இன்று இரண்டாவது தடவையாகவும் பூமியதிர்ச்சி- காரணத்தைக் கண்டறிய முடியாமல் திணறும் ஆராய்ச்சியாளர்கள்
அம்பாறை, வடினாகல பிரதேசத்தில் இன்று மீண்டும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தபோதும் 10மி அதிர்வதற்கான காரணத்தை கண்டறியமுடியவில்லை என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறையில் ஏற்கனவே இவ்வாறு ஒரு தரம் பூமியதிர்ச்சி ஏற்பட்டிருந்தது.
இப் பூமி அதிர்ச்சியானது இயற்கையானது இல்லையென்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையிலேயே இன்று பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆராய்ச்சியாளர்களால் பூமியதிர்வை கண்டறிவதற்கான சாதனங்களை பொருத்தப்பட்டிருந்தன.
ஆனாலும் இன்று ஏற்பட்ட பூமி அதிர்வதற்கான காரணத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியமுடியவில்லை. அதுமட்டுமன்றி அம்பாறையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை இப் பூமி அதிர்ச்சி காரணமா கஅம்பாறை- கண்டி வீதியில் 69 ஆவது மைல்கல்லுக்கு அருகிலுள்ள தற்காலிக பாலம் உடைந்து வீழ்ந்துள்ளதால் அந்த வீதியின் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment