Saturday, January 19, 2013

சுவிட்சர்லாந்தில் புலிகள் றிசார்ட் பதுயுத்தீனுக்கு ஆலாத்தி எடுத்த கதை தெரியுமோ?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் றிசார் பதுயுத்தீன் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவர் புலம்பெயர் ஊடகங்களால் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்படுபவர். இவர் வன்னி நிலப்பரப்பதை துண்டாட முயற்சிக்கின்றார். மன்னார் நீதியமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றார். யாழில் முஸ்லிம்களின் அடாவடித்தனங்களுக்கு அச்சாணியாக அமைந்துள்ளார் என்றெல்லாம் புலம்பெயர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுக்கொண்டிக்கின்ற தருணத்தில் அமைச்சரின் சுவிட்சர்லாந்து பயணம் மிகவும் சௌகரியமாக நிறைவேறியுள்ளது.

நாம் அமைச்சரை சுவிட்சர்லாந்து மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. மேற்படி செய்திகளை வெளியிடுகின்றமைக்கு ஆக்கமும் ஊக்கம் அளிக்கின்ற ஒரு தரப்பினர் அமைச்சருக்கு ஆலாத்தி எடுத்துள்ளனர் என்பேதே இங்கு சொல்லப்படுகின்ற செய்தி.

புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் றிசார்ட் பதுயுத்தீனுக்கு விருந்துபசாரம் அளித்துள்ளனர். இவ்விருந்துபசாரமானது இலங்கையில் தங்களது வியாபாரங்களை விஸ்தரித்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை மேடையாக அமைந்திருந்தாக அறியக்கிடைக்கின்றது. சாதாரண மக்கள் இலங்கைக்கு சென்றால் அங்கு பிரச்சினை என சொல்பவர்கள்தான் இவ்வாறு றிசார் பதுயுதீன் உடன் வியாபாரம் பேசியுள்ளனர்.

இதேநேரம் அமைச்சரை புலிகளுடன் நேரில் கண்ட புலி எதிர்பாளர் ஒருவர் : 'என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்துள்ளீர்கள், இவரை நன்றாக தெரியுமோ' என புலி ஆதரவாளரான வர்த்தகரை காட்டி கேட்டபோது, 'அது வந்துட்டு நம்மட ... .. அப்பிடி என்று தலையை சொறிந்த அமைச்சர் நழுவிக்கொண்டு சென்றுவிட்டாராம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com