கருப்பை வெடித்து குழந்தையும் தாயும் பலி
பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் கருப்பை வெடித்து தாயும் குழந்தையும் இறந்துள்ளனர்.
37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் பிரசவத்துக்காக நேற்று மாலை பம்பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது குழந்தையின் தலை பெரிதாக காணப்பட்டதால் குழந்தையை பெற்றெடுப்பதில் தாய் சிரமப்பட்டுள்ளார்.
குழந்தையை வெளியில் எடுக்க வைத்தியர்கள் ஒரு மணி நேரம் போராடியுள்ளார்கள். இருந்தும் பயன் கிடைக்கவில்லை. தாயின் கருப்பை வெடித்து குழந்தை இறந்துள்ளது. சிறிது நேரத்தில் தாயும் இறந்துள்ளார்.
0 comments :
Post a Comment