சொந்த மண்ணில் இலங்கையிடம் மண்டியிட்டது அவுஸ்ரேலியா- தொடரில் முன்னிலை பெற்றது இலங்கை அணி
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவுஸ்ரேலியா அணியினை ஆபாரமாக வென்று இலங்கை அணி தொடரில் முன்னிலை வகிக்கின்றது. அவுஸ்ரேலியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடந்தது. முதலில் விளையாடிய அவுஸ்ரேலியா அணி இலங்கை வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. அந்த அணி 26.4 ஓவரில் 74 ரன்னில் சுருண்டது.
ஸ்டார்க் அதிக பட்சமாக 22 ரன் எடுத்தார். 9 ஆஸ்திரேலிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். அவுஸ்ரேலியாவின் 2-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு அந்த அணி 2 முறை 70 ரன்னில் சுருண்டு இருந்தது.
இலங்கை தரப்பில் குலசேகரா 5 விக்கெட்டும், மலிங்கா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கி விளையாடியது. துவக்கத்தில் தடுமாறிய இலங்கை அணி தில்சான் மற்றும் பெரேரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை எட்டியது.
இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிக பட்சமாக தில்சான் 22 ரன்னும், பெரேரா 22 ரன்னும் எடுத்தனர்.
0 comments :
Post a Comment