Thursday, January 31, 2013

ஒன்பது வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 65 வயது காவலாளி- யாழ்.பிரபல பாடசாலையில் சம்பவம்

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆரம்ப பிரிவு பாடசாலையில் கல்வி கற்ற ஒன்பது பாடசாலை மாணவியொருவரை அங்கு பணியாற்றி 65 வயதுள்ள காவலாளியான நபர் பாலியல் வன்புணர்வுக்கு உட்டுத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடமபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில ;சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குருநகரைச் சேர்ந்த காவலாளியான நபர் இன்று யாழ்.பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com