Monday, January 21, 2013

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர் பட்டியல் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் யாப்பின் அடிப்படையில் சொத்துக்கள் தொடர்பான பிரகடனங்கள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பித்த அரசியல் கட்சிகளின் பெயர்பட்டியலை எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடப்போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் செயலாளர்களினால் இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கும்படி கோரிக்கை விடப்பட்டது. இதனை முன்னி;ட்டு இவ்வாறு கால அவகசாம் வழங்கப்பட்டதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளத. தேவையான தகவல்களை வழங்காத அரசியல் கட்சிகளின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளது.. இலங்கையில் இது வரை 64 அரசியல் கட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com