வடக்கில் படையினர் வீடுகட்ட 10 மில்லியன் வழங்கினார் ஆளுனர்
பாதுகாப்பு படையினர் வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் படையினர் கிளிநொச்சியில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடுகளை அமைத்து வழங்கி வருகின்றனர். இதன் பிரகாரம் இத்திட்டம் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருட திட்டத்திற்கென வடமாகாணம் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினர், தங்களுடைய முழு ஆதரவையும் மக்களின் தேவைகள் ஏற்படும் பிரதேசங்களை பொறுத்து பல்வேறு சமூக மேம்பாட்டு திட் டங்கள் மூலம் வழங்குகின்றனர். அத்திட்டங்களில் ஒன்றாக உள்ளடக்கி வீட்டுத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சியில் மீள் குடியேறிய மக்களுக்கு உதவுகின்றனர்.
பாதுகாப்பு படைகள் எந்த விததொழிலாளர் கட்டணங்களும் இல்லாமல் வீடுகளைதாமே கட்டுகின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய விடயமே. கடந்த வருடம் இத்திட்டத்தின் முதலாம் கட்டம் முடிவடைந்துள்ளது. இத்திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு இவ்வருடம் வட மாகாணம் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இத்திட்டத்திற்கான காசோலையை வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி கிளிநொச்சி பாதுகாப்புப்படையின் கட்டளை அதிகாரியிடம் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment