1 இடத்தைப் பிடிப்பேன் : சாய்னா நேவால் நம்பிக்கை!!
உலக பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் சமீபத்தில் 2 வது இடத்தை பிடித்த சாய்னா, இந்த ஆண்டிற்குள் நம்பர் ஒன இடத்தைப் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மும்பையில் நடைபெற்ற விளம்பர மாடல் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டு பேசிய போது, சாய்னா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் இது குறித்து பேசுகையில், "நான் கடினமாக உழைத்து வருகிறேன். உலக தர வரிசையில் இப்போது 2 வது இடத்தில் உள்ளேன். நிச்சயம் கடின உழைப்பின் மூலம் முதலாவது இடத்தை எட்டுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த ஆண்டில் எனக்கு 15 முதல் 20 வரை என்று சொல்லிக்கொள்ளும்படி நிறைய போட்டிகள் இருக்கிறது. அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்காகும். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமாகும். உலக தர வரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல, இருப்பினும் கடின உழைப்பின் மூலம் அந்த இலக்கை அடைவேன்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment