Monday, December 17, 2012

தமிழர் வாழ்வை பணயம் வைக்கும் ஊடகங்கள்

மக்களின் உரிமைகளை உரத்த குரலாலும் வலிமையுள்ள எழுத்துக்களாலும் எடுத்துரைக்க வேண்டிய ஊடகங்கள் தமது கடமையை மறந்து அரசியல்வாதிகள், தொழிலதிபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உயிரற்ர உடம்மைப்போல் ஆகி கிடக்கிறது யாழ்ப்பாணத்து ஊடகங்கள்.
மக்கள் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை இழந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் போது அந்த இழப்பின் உணர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் அதனை வைத்து அரசியல் லாபம் தேடும் நோக்குடன் தமது அரசியலுக்கு கருத்துகூற இதனை முன்பக்க தலைப்பு செய்தியாக்கி அரசியல் வாதிகளின் கருத்தை மக்கள் கருத்துக்களாக காட்ட முனைவதை யாழ்ப்பாணத்து பத்திரிகைகளில் காணலாம்.

நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பற்றி சிந்திப்பதில்லை, நல்லது ஏதும் நடந்து விடக்கூட அந்த நல்லதிலும் ஏதும் ஒரு தவறு இருந்தால் அதனை விமர்சித்து அரசியல் லாபம் பெற முனைகிறது தமிழ் பத்திரிகைகள். இதற்கு உதவ முன்வந்துள்ளன் கட்சி இணையத்தளமும் ஒரு சில தமிழ் தேசிய இணையங்களும்.

யாழில் உள்ள அரசியல் வாதிகளின் வாயில் வருவதை காவிக்கொண்டு வரும் ஊடகங்கள் மக்கள் வாயில் வருவதை திரும்பிப்பார்ப்பது இல்லை. ஒருபத்திரிகை திரும்பி பார்க்க நினைத்தால் போதும் மறுதினமே ஒரு பிரச்சனை வந்து விடும் யாழ் குடாவில். ஏன் எனில் பிரச்சினை தீர்ந்து விட்டால் எதனை எழுதுவது? எழுதினாலும் மக்கள் பார்க்க மாட்டார்கள் என்பது தான் ஊடக நிறுவனங்களினது கருத்தாக உள்ளதுடன் போருக்குள் வளர்ந்த ஊடகங்கள் சமாதானத்தில் வளர முடியாது போகவே ஏதோவொரு பிரச்சினையை தூண்டிவிட்டு அதில் சுகமாய் வாழ்கின்றன யாழ்ப்பாணத்து ஊடகங்கள்.

ஊடகங்களை நடத்தி செல்ல பணம் தேவை தான். ஆனால் அந்த பணத்தை பெறுவதற்கு பல வழிகள் இருந்தும் ஏன் மக்களின் வலியினையும், கஸ்டத்தையும் விற்பனையாக்குவதுடன் புதிய வலிகளை தூண்டி விடுகிறார்கள் என்பதுதான தெரியவில்லை. இதனை நினைத்துப்பார்க்கும் போது எனக்கே கேவலமாக இருக்கின்றது.

ஊடகம் என்பது ஓர் மாபெரும் சக்தி. அதை ஆயுதமாக பயன்படுத்தி மக்களினதும் ஏழைகளின் குரலாக ஒலிக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிக்கும் பணம் படைத்தவனுக்கும் உதவும் நிறுவனமாக இருக்க கூடாது அப்படி இருப்பதானால் மக்களுக்கான ஊடகம் என்று சொல்லக்கூடாது, வெறுமனே அரசியல் வாதிகளின் ஊடகமாக இருக்க வேண்டும். இந்த நிலை எத்தனை காலம் நீடிக்கும் மக்கள் தற்போது அடைபட்டுக்கிடைக்கவில்லை நாட்டு நிலமையை அறிவதுடன் தமிழ் அரசியல் வாதிகள் பற்றியும் அறிந்து விட்டனர்.

கடந்த காலத்தில் நடைபெறும் எதிர்ப்பு பேரணிகளில் 1000 கணக்கில் தோன்றுபவர்கள் தற்போது 50 -60 வரையாக குறைந்துள்ளது இதற்கு ஒரு எடுத்துக்காட்டுகிறது. அதுவும் நீடிக்கப்பபோவதில்லை மக்களுக்கான அடிப்படை பிரச்சினை தீர்ந்து விட்டால் அரசியல் வாதிகள் மட்டும் போராட்டம் நடத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இதனால் தான் தமிழ் ஊடகங்கள் யாழில் மட்டும் அல்லாது தமிழர் இருக்கும் பிரதேசம் எல்லாம் பிரச்சினையை தோற்றுவித்து தமது வாழ்க்கையை நடாத்துகிறார்கள். தமிழ் மக்கள் அனைவரும் ஊடகங்களில் வெளிவரும் உன்மைத்தன்மையை அறிந்தால் உங்களது வாழ்க்கை மட்டும் அல்லாது தமிழருக்கு இருக்கும் பிரச்சினைக்கும் தீர்வுகிட்டிவிடும்.

1 comments :

Anonymous ,  December 17, 2012 at 9:12 PM  

Public opinion one of the most important factor in Democracy.Genuine
journalism,the work of collecting news which are based on reality and making agreeable and reasonable comments for news media.Bogus and fabricated stories a kind of conspiracy theory to take the innocent society to a disasterous situation.The people should know to distinquish between bogus and reality,whether it comes from any news media.All that glitters is not gold.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com