லொறியும் மோட்டார் சைக்கிளும் விபத்து சம்பவ இடத்தில் இளைஞர் சாவு
லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் ஏ9 வீதிக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து எழுதுமட்டுவாள் நோக்கிச் சென்று கொண்டிருந்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் வயது 27 என்ற இளைஞரே பலியானவராவார்.
இச்சம்பம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment