Friday, December 21, 2012

கிழக்கில் கடலில் இருந்து வெளியேறும் கலர்ப் பாம்புகள் - உலகம் அழியுமா? என மக்கள் பதற்றம்

.

கிழக்கு மாகாணத்தின் அட்டாளைச்சேனை கோணாவத்தைக் கடற்கரையில் பல வகையான கலர்ப் பாம்புகள் தொடர்ச்சியாக கரையெதுங்கிய வண்ணம் உள்ளததால் பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளதோடு மக்கள் கடும் பதற்றத்திலும் பீதியிலும் உறைந்துள்ளனர். இப்பாம்புகள் இன்று 20ஆம் திகதி முதல் கரையேறி வருகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிற்பகல் 05 மணி முதல் அட்டாளைச்சேனை கோணாவத்தை கடலில் இருந்து பாம்புகள் தொடர்ச்சியாகக் கரையேறி வருகின்றன. இதனை அறிந்த பொதுமக்கள் பாம்புகளைக் காண்பதற்காக கடற்கரையினை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளனர்.

இவ்வாறு கரையேறும் சில பாம்புகள் - சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றதோடு பல வகையில் குறித்த பாம்புகள் உள்ளன.

இதேவேளை நாளை உலகம் அழியும் என்ற வதந்தி காரணமாக ஏற்கனவே பயந்திருந்த பொது மக்களை மேலும் அச்சப்படுத்துவதாக இச்சம்பவம் கிழக்கில் அமைந்துள்ளது..




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com