Wednesday, December 12, 2012

ஜேர்மனில் ரயில் நடைபாதையில் குண்டு மீட்பு

ஜேர்மனியில் உள்ள பான் ரயில் நிலையத்தில் ஒரு பை நடைபாதையில் கேட்பாரற்றுக் கிடப்பதாகவும் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்று அச்சம் உண்டாவதாகவும் தொலைபேசித் கிடைத்த தகவலின் அடிப்படையில் குண்டென்று வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் படையினரால் செயலிழக்க வைக்கப்பட்டள்ளது.

இதற்காக அரைமணி நேரம் அந்த இடத்திற்குள் யாரையும் வரவிடவில்லை. நேற்று மதியம் 2 மணியளவில் பான் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் பல ரயில்கள் ரத்தாயின.

ஓர் இளைஞர் நடைபாதையில் ஒரு பெரிய பையை வைத்துவிட்டுப் போனதை சிலர் பார்த்தனர்.
வெகுநேரமாகியும் அந்தப் பையை எவரும் வந்து எடுத்துச் செல்லாததால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தப்பைக்குள் ஒரு குழாய் வெடிகுண்டும், ஒரு கடிகாரமும் இருந்தன. வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததும் மக்கள் அச்சமின்றி நடமாடினர்.

சிறிது நேரத்தில் வேறோர் இடத்தில் ஒரு காலணிப் பெட்டி அனாதையாகக் கிடப்பதைக் கண்டு அதற்குள் வெடிகுண்டு எதுவும் இருக்குமோ என்று பயணிகள் அஞ்சினர்.

உடனே பொலிசாரும், வெடிகுண்டுப் படையினரும் வந்து அது வெறும் பெட்டிதான் என்பதை உறுதி செய்தனர்.

இதனால் கோலோன் செல்லும் ரயில்கள் பான்-பியுல் வழியாகத் திருப்பிவிடப்பட்டது. தடுமாறிய பயணிகள் வாடகைக் கார்களில் ஏறிச் சென்றனர்.
வெடிகுண்டு இருந்த ரயில்வே கட்டிடத்திற்குள் பொலிசார் யாரையும் அனுமதிக்கவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com