மன்னாரில் கடும் வெள்ளம்,அடைமழை மக்கள் இடப்பெயர்வு - அவசர நிலை பிரகடனம்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையால் மன்னார் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கான சகல வெளிப் போக்குவரத்துக்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியுடன் முடக்கப்பட்டுள்ளன.தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மன்னார் மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு அரச ஊழியர்களின் விடுமுறைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான அவசரக் கூட்டம் ;மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே மன்னார் மாவட்டத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை புத்தளத்திலிருந்து படகுகள் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள
வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 பஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களின் அவசர தேவைக்காக கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேச செயலாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் கிராம சேவை அலுவலகர்களும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment