அம்பாறையில் தொடர் நிலஅதிர்வுகள் பதற்றத்தில் மக்கள்
அம்பாறையின் வதினகல, தேவலகந்த, தமண ஆகிய பகுதிகளில் தொடர் நிலஅதிர்வுகள் ஏற்பட்டதாக புவிச்சரதவியல் மற்றும் அளவைகள் சுரங்கங்கள் பணியகம் அறிவித்துள்ளது. இந்த நில அதிர்வுகள் இன்று காலை ஏற்பட்டுள்ளது.; காலை 9 மணியளவிலும் பின்னர் 10.15 மணியளவிலும் நில அதிர்வுடன் பாரிய சத்தங்களைக் கேட்டதாக அந்தப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் நடத்திய ஆய்வில், அப்பாறையில் முன்னர் உண்டான நில அதிர்வு மனித நடவடிக்கைகளினால் உண்டானது என அறிவித்திருந்தது.
இன்று காலை உணரப்பட்ட இந்த நில அதிர்வு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் என்.பி.விஜேயானந்த கூறினார்.

0 comments :
Post a Comment