தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குங்கள் - இலங்கை தமிழர் ஆசிரிய சங்கம்
மிக நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாப் பணியாற்றும் முல்லைத்தீவிலுள்ள தொண்ட ஆசிரியர்களுக்கு நிரந்த நியமனங்களை கல்வியமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இலங்கை தழிழர் ஆசிரிய சங்கத்தின் பொது செயலாளர் சரா.புவனேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவிலுள்ள தொண்டராசிரியர்கள் மிக நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாகவே பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் தமக்கான நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்காக நியமனங்களை கல்வியமைச்சு வழங்க வேண்டும். அப்போது தான் போரினால் பாதிக்கப்பட்ட இவர்கள் தமது வாழ்வை கட்டியெழுப்ப முடியும் என்றார்.
0 comments :
Post a Comment