Friday, December 21, 2012

யோகேஸ்வரனுக்கு ஆப்பு வைத்தார் பொன் செல்வராசா.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த விஜயசேகரவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மூன்று மில்லியன் ரூபாவை முதல் கட்டமாக வழங்குவதாக >தன்னிடம் அவர் தெரிவித்தாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரை தொடர்புகொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 10 மில்லியன் தேவையாகவுள்ளதாகவும் அமைச்சருக்கு எடுத்துக்கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மகிழூர், கண்ணகிபுரம், குருமண்வெளி, ஓந்தாச்சிமடம் ஆகிய பகுதிகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து அவர்களுக்கு உதவுவதற்காக மாவட்ட செயலகத்துக்கு உடனடியாக ஒரு மில்லியன் ரூபாவை அனுப்புவதாக உறுதியளித்து அந்த பணமும் வந்துசேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 14 பிரதேச செயலாளர் பிரிவுகளும் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனைத்து பகுதிகளுக்குமான நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்புகொண்டு கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மினி சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டது தொடர்பில் மட்டக்களப்பு பிராந்திய மின் அத்தியசகரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மின்விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மின்சாரசபைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.

வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உதவுவதற்காக புலம்பெயர் தமிழரிடம் பாராளுமன்று உறுப்பினர் யோகேஸ்வரன் நிதிகோரியுள்ள நிலையில் அதே மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான பொன் செல்வராசா அரச உயர் மட்டத்தினை தொடர்பு கொண்டு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கின்றார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com