Monday, December 3, 2012

பாடசாலைவிட்டு இடைவிலகிய 8091 மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளில் சேர்ப்பு

பாடசாலை செல்லாத 8091 சிறுவர்கள் மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதற்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதன்படி கடந்த ஆண்டில் இத்தகைய 4541 சிறுவர்கள்களும் 2012 ஆண்டில் 3550சிறுவர்கள்களும் மீண்டும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறுவர் பராமரிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளுக்காக இதுவரை 11 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது


நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலங்களினூடாகவே நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தில் அந்தந்த பிரதேச செயலாளர்களின் சிபாரிசுகளுக்கிணங்க சிறுவர் நலவுரிமை அதிகாரிகளினால் இது தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்ட பிள்ளைகளை தேடிப்பிடித்து இவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடைகள் ,பாடசாலை உபகரணங்கள், புத்தகப்பொதிகள் போன்றவற்றைப் பெற்றுக் கொடுத்து அவர்களை பாடசாலைக்கு மீண்டும் சேர்க்கும் பொறுப்பு மேற்படி சிறுவர் நலவுரிமை அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, அத்தகைய பிள்ளைகளுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 1500 ரூபா மாதாந்த கொடுப்பனவும், உயர்தர வகுப்பு மாணவர்களாயின் 2000 ரூபா மாதாந்த கொடுப்பனவும் உதவிப்பணமாக வழங்கப்படுவதாவும் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

பொருளாதார கஷ்டம் , தனது தாயை அல்லது தந்தையை இழந்தமை ,தந்தையால் கைவிடப்பட்டமை, போக்குவரத்துப் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களினாலேயே இவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லை என ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com