டிசம்பர் 21 இல் உலகம் அழியாது நாஸா, ஆதார் சி கிளாக் நிலைம் அறிவிப்பு
டிசெம்பர் 21ஆம் திகதியில் உலகம் அழிந்துவிடும் என்ற கருத்திணை ஆர்தர் சி கிளார்க் நிலையமும் நாஸாவும் முற்று முழதாக மறுத்துள்ளதோடு உலகம் அழியும் என்ற வதந்தியை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளன. என்று மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள. செய்தியை ஆர்தர் சி. கிளார்க் நிலையம் நிராகரித்துள்ளதோடு அமெரிக்காவின் நாஸாவும் உலக அழிவு எதிர்வுகூறலை முழுமையாக மறுத்துள்ளது
டிசெம்பர் 21ஆம் திகதி, உலகம் இருளில் மூடிவிடும் என கூறப்படுவது அர்த்தமற்றது என ஆர்தர் சி. கிளார்க் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
சூரியனிலிருந்து சில சமயம் தீப்பிளம்புகள் மற்றும் சூரிய புயல் என்பன ஏற்படுவதுண்டு. இவற்றை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே அறிந்துகொள்ள முடியும் என ஆர்தர் சி. கிளார்க் நிலைய பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த உலகம் 2012இல் அழிய மாட்டாது. எமது கிரகம் 4 பில்லியன் வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருப்பதாக உண்மையான விஞ்ஞானிகள் எவரும் கூறவில்லை என நாஸா கூறியுள்ளது.

0 comments :
Post a Comment