இலங்கையின் முதலாவது செய்மதி நாளை விண்நோக்கிச் செல்கின்றது.
அண்டவெளியை வெற்றிக் கொள்ளும் இலங்கையின் கனவு நாளை நனவாகவுள்ளது. இலங்கையின் முதலாவது தொலை தொடர்பு செய்மதி நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது. சுப்ரின்செட் ஒன்று என அழைக்கப்படும் செய்மதி நாளை சீனாவின் சிங்வேன் செய்மதி மத்திய நிலையத்திலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 3.43 மணிக்கு இச் செய்மதி ஏவப்படும்.
விண்ணில் ஏவப்பட்டு 7 நிமிடங்களின் பின்னர் இலங்கையின் கடற்பரப்பிற்கு மேலாக கிழக்கு வான் பகுதியில் இச் செய்மதி மையம் கொள்ளும். இதன் மூலம் 15 வருடங்களுக்கு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். தெற்காசியா, கிழக்கு ஆபிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் இதன் மூலம் சேவையை பெற்றுக் கொள்ளலாம். 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்காக செலவிடப்படடுள்ளது. புதிய செய்மதியொன்று ஏவப்படவுள்ளமை இலங்கையின் தொலை தொடர்பு வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என விமர்சகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment