கர்ப்பினிப்பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் .
கர்ப்பமா இருக்கும் போது நிறைய சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கும். ஆனால் அவ்வாறு எல்லாவற்றையும் சாப்பிடக்கூடாது. அப்படி உண்ணும் சில உணவுகளில்
கருசிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
ஆகவே அவ்வாறு ஏற்படாமல் சரியான உணவுகளை உண்டு, தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க, எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மீன் என்றால் மிகவும் பிடிக்கும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ஆறுகள், குளங்கள் போன்றவற்றில் இருக்கும் அழுக்குகளால் பாதிக்கப்பட்டிருக்கும். மீன் உடலுக்கு மிகவும் நல்லது தான். ஆனால் அதனை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக் கூடாது.
ஆறு குளங்களில் இருக்கும் மீன்களை தானே சாப்பிடக்கூடாது, கேனில் விற்கும் மீன்களை சாப்பிடலாம் அல்லவா? என்று நினைத்து அதை வாங்கி சாப்பிட வேண்டாம். ஏனெனில் அதில் மீன் கெட்டுப் போகாமல் இருக்க சில கெமிக்கல்களை சேர்த்திருப்பார்கள். அதனால் அந்த மீன்களை கர்ப்பம் தரிக்கும் பெண்கள் சாப்பிட்டால் உடலில் இரத்த அழுத்தம் அதிகமாவதோடு, கர்ப்ப நேரத்தில் உடலில் இருக்க வேண்டிய தண்ணீரின் அளவும் குறைந்துவிடும்.
கறி மற்றும் முட்டைகளை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிலும் முட்டை, கறி மற்றும் கடல் உணவுகளை நன்றாக வேக வைக்காமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் அத்தகைய உணவுகளில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா இருக்கும். ஆகவே அவற்றை நன்றாக சமைக்காமல் சாப்பிட்டால் அந்த பாக்டீரியா கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
லிஸ்டீரியா என்னும் பாக்டீரியா தான் கருசிதைவிற்கு காரணமானது. அந்த பாக்டீரியாக கர்ப்பமாக இருக்கும் போது எந்த நிலையிலும் தாக்கும், அதிலும் சரியாக சமைக்காத சிக்கன், கறி, கடல்உணவு, சீஸ், பால் பொருட்கள் போன்றவற்றில் அதிகமாக அந்த பாக்டீரியாவானது இருக்கிறது. ஆகவே அவற்றை உண்ணும் போது கவனமாக இருக்க வேண்டும்.
பதப்படுத்தப்படாத பால் பொருட்களை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட வேண்டாம். இது கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பழங்களை சாப்பிடும் போது அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிப் பழம் போன்றவற்றை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
உணவுகளை சாப்பிடும் போது, அந்த உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் உண்ண வேண்டும். மேலும் சுத்தம் செய்யாமல் எந்த பொருளை சாப்பிட்டாலும், அது கருசிதைவிற்கு வழிவகுக்கும். ஆகவே சமைக்கும் போது கூட காய்கறிகளை நன்கு கழுவி பின்னரே சமைக்க வேண்டும். அதிலும் முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றில் பாக்டீரியா மற்றும் மற்ற கிருமிகள் இருக்கும். ஆகவே அப்போது அதனை நன்கு சூடான நீரில் கழுவி, பின்பு சமைக்க வேண்டும்.
சில சமயங்களில் ஜூஸ் வாங்கி குடிக்கம் போது, அதன் மேல் ஒட்டியிருக்கும் தயாரித்த தேதியை பார்த்து, பதப்படுத்தப்பட்டது தானா என்பதையும் நன்கு அறிந்து பின்னரே குடிக்க வேண்டும். அதற்கு பதிலாக கடைகளில் விற்கும் பழங்களை வாங்கி வீட்டிலேயே ஜூஸ் செய்து குடிக்கலாம். அது உடலுக்கும் சரி, கருவில் இருக்கும் சிசுவிற்கும் சரி மிகவும் ஆரோக்கியமானது.
எனவே மேற்கூறிய அனைத்தையும் நினைவில் கொண்டு உணவுகளை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமோடு இருப்பதோடு, கருவும் ஆரோக்கியமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
0 comments :
Post a Comment