Wednesday, November 21, 2012

ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம் ! புலிகள் அறிக்கை:

புலிகள் தற்போது பல்வேறு சிறு துண்டுகளாக பிளவுபட்டு நிற்கின்றார்கள் என்பது மட்டுமல்ல அதிகார போட்டியின் நிமிர்தம் அண்மையில் பிராண்சில் கொலை ஒன்றையும் நாடத்தியுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்நிலையில் நேற்று 20ம் திகதி அவ்வமைப்பின் ஒரு பகுதி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில்..


தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
20௧1௨012.

ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம் !

எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே,


2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர், இன்று புலம்பெயர் நாடுகளிற் தமிழர்கள் மத்தியிற் பல பிரிவினைகள் உருவாகியுள்ளன எதிரியாற் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

சிங்களத்தின் சதிச்செயல்களே இதற்கு முக்கிய காரணமாகும். எதிரியிடம் விலை போய்விட்ட தமிழ்க் கைக்கூலிகளின் செயற்பாடுகள்ளான இவை பற்றி ஏதுமறியாது அந்தச் சதிச்சுழலுக்குள் அகப்பட்டுக் கொண்ட மக்கள் மற்றும் சில போராளிகளின் செயற்பாடுகள் தமது கடமையை மறந்துவிட்டு முறையற்ற வகையில் வேறு பணிகளிற் தலையிட்டுக் குழப்பும் சில போராளிகளின் நடவடிக்கைகள், தமிழ்மக்களின் நலன்களை முதன்மைப் படுத்தாமற் சுயநல அடிப்படையிற் செயற்படும் சில தனிநபர்கள் மற்றும் தூரநோக்குச் சிந்தனையற்றுச் செயற்படும் சில ஊடகங்கள் போன்றவற்றுக்கும் அதிற் பங்குண்டு.

புலிகள் அமைப்பு சிறு சிறு பிரிவுகளாக பிளவு பட்டுள்ளது என்பதையும் அதன் உறுப்பினர்கள் சுயநலன்களுக்காக பிளவு பட்டு நின்று மேற்கொள்ளும் மோதல்களால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை என்றும், புலி ஊதுகுழல்கள் இவற்றை தமக்கு ஏற்றவாறு சடைந்து தமிழ் மக்களை மேலும் இருழினுள் வைத்திருக்க முயன்று கொண்டிருக்கின்றார்கள் என்றும் நாம் நாம் தொடர்சியாக தெரிவித்து வந்த கருத்துக்களுக்கு மேற்படி அறிக்கையிலுள்ள வசனங்கள் ஒப்புதல் கொடுத்துள்ளது.

முள்ளிவாய்க்காலின் பின்னர், தமிழீழத்திலிருந்து புலம்பெயர் நாடுகளை நோக்கி வந்த குறிப்பிட்ட சில போராளிகளாற் தலைமைச்செயலகம் என்ற பெயரில் ஒரு அணி உருவாக்கப்பட்டது. இவர்களது தான்தோன்றித்தனமான அடாவடித்தனமான நடவடிக்கைகள் தமிழரின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலேயே அமைந்தன. அதேவேளை புலம்பெயர் நாடுகளில் இயங்கும் எமது பணியகங்களை முன்னர் நிர்வகித்து வந்த அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்த ஒரு சில போராளிகளின் தூரநோக்குச் சிந்தனையற்ற, தெளிவற்ற முடிவுகள் மற்றும் செயற்பாடுகள் அனைத்துலகத் தொடர்பகத்துடன் தலைமைச்செயலக அணியானது மோதல் போக்கை அதிகரித்துச் செல்ல வழிவகுத்தது. இந்த முரண்பாடுகளை மிகவும் சரியாகப் பயன்படுத்திய சிறிலங்காப் புலனாய்வுத்துறையினர் தமிழர்களுக்குள் மிக ஆழமாக ஊடுருவியுள்ளனர். இதனால் ஏற்பட்ட விளைவுகளாலேயே உலகத்தமிழரெல்லாம் மனம் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தும் வண்ணம், எமது மூத்த போராளியும் பொறுப்பாளருமாகிய கேணல்.பரிதி அவர்களை நாம் இழக்க நேரிட்டுள்ளது.

பிராண்சிலே புலிகளின் நெடியவன் குழுவினைச்சேர்ந்த பரிதி என்பவர் அதிகார மோதலினால் கொல்லப்பட்டார் என நாம் தெரிவித்திருந்த செய்தியினை மேற்படி அறிக்கை ஊர்ஜிதம் செய்துள்ளது. மேலும் சிறிலங்கா இராணுவம் போராளிகளை தவறாக பயன்படுத்துகின்றாம். யார் போராளிகள்? போராளிகளானால் எதிரியின் காலில் சரணாகதி அடைவார்களா? இவர்களை போராளிகள் என்று சொன்னால் போராளிகளை கோடாரிகள் என்பதா? இவர்கள் புலிகளின் தலைமையால் வழர்கப்பட்ட கூலிப்படைகள். போராளிகள் எந்த காலகட்டத்திலும் விலைப்போக மாட்டார்கள், இன்று தம்மை நியாயப்படுத்துகின்ற ஒரு தரப்பு தமது மறுதரப்பு தொடர்பாக முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் யாவும் நாம் ஒட்டு மொத்த புலிகள் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்களே.


எமதருமைப் போராளி நண்பர்களே,

அனைத்துலகத் தொடர்பகம் என்பது, எமது தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு துறையாகும். அது தனி மனிதர்கள் சிலரின் சொத்தன்று. அனைத்துலகத் தொடர்பகத்திற் பணி வழங்கப்பட்டிருந்த சிலர் தவறிழைத்தால் அதற்காக அனைத்துலகத் தொடர்பகமே தவறென்று கூறுவதும் போட்டி அணியை உருவாக்குவதும் எமதியக்க மரபன்று. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின், இன்று தமிழினம் தமது நாட்டை முற்று முழுதாக எதிரியின் கைகளில் இழக்கும் நிலைக்கு வந்துள்ளது. இதனை மறந்து அனைத்துலகத் தொடர்பகம் என்றும், தலைமைச்செயலகம் என்றும் குறுகிய வட்டங்களுக்குள் அணிகளாகப் பிரிந்து நின்று செயற்படாமல், நாமனைவரும் விடுதலைப்புலிகள் என்ற எண்ணத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

இங்கு அனைத்துலகச் செயலகம் மாத்திரமல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் என நாமம் சூடி நின்ற அமைப்பே ஒரு தனி மனிதனின் சொத்து. இரண்டாம் தலைமை ஒன்று இருக்கக்கூடாது என்பதற்காக பலியெடுக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை எத்தனை எத்தனை. இத்தனைக்கும் மத்தியில் சிறு சிறு பிளவுகளாக நிற்காமல் ஒன்று பட்டு நிற்பதற்கு இத்தனை மண்டாட்டமா? இது ஒன்று பட்டு நிற்பதற்கான மண்டாட்டமா? இல்மைல இன்னும் வசூலிப்புக்காக ஒரு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் எல்லோரும் ஒன்று பட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிப்போம், பிளவுபட்டு நின்றால் உண்டியல் நிரம்பாது என்ற குலைநடுக்கமா?

இறுதிவரை களத்தில் நின்று, தம்மை ஈன்றெடுத்த பெற்றோரையும் தாம் ஈன்றெடுத்த பிள்ளைகளையும் குடும்பத்தையும் விட்டுப்பிரியப்போகும் தருணத்திலும் எதிரியிடம் மண்டியிடாது மண்ணுக்காகப் போராடி மடிந்த எமது வீரமிக்க தளபதிகள், எமது திறமை மிக்க போராளிகள், எம்மையும் மண்ணையும் நேசித்த மக்கள் எல்லோரையும் எண்ணிப்பாருங்கள். எமது மாவீரர்கள் எவருமே மாவீரர்நாள் நடாத்தித் தம்மைச் சிறப்பிக்க வேண்டுமென எதிர்பார்க்கவில்லை. தாயகத்தின் விடுதலையை நோக்கி நாம் தொடர்ந்தும் செயற்படவேண்டும்ளூ விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற ஒரேயொரு எதிர்பார்க்கை மட்டுமே அவர்கள் எல்லோரின் மனங்களிலும் எப்போதும் நீங்காதிருந்தது. ஆகவே அவர்களின் தியாகங்கள் வீண்போகக் கூடாதெனில் நாம் எமது இலட்சியத்தை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதை விடுத்து ஒவ்வொரு வருடமும் மாவீரர்நாள் நடாத்துவதில் மட்டும் போட்டி போடுவதும், அதில் மட்டும் அக்கறை செலுத்துவதும் மிகவும் வெட்கத்துக்கும் வேதனைக்குமுரிய விடயமாகும்.

புலிகள் மாவீரர் தினம் நாடாத்துவற்கு மாத்திரமே போட்டி போடுகின்றார்கள் என்ற எமது தொடர் குற்றச்சாட்டுக்கு மேலே உள்ள பந்தி புலிகளின் ஒப்புதல். இதையே நாம் தொடர்ந்தும் அழுத்தி வந்தோம். புலம்பெயர் நாடுகளில் கோடிக்கணக்கில் செலவிட்டு மாவீரர் நாள் கொண்டாடுவதை விடுத்து இப்பணத்தினை வன்னியிலே நீங்கள் நடுத்தெருவில் விட்டு வந்ததன் மூலம் ஒரு நேர சாப்பாட்டுக்கு வழியின்றி நிற்கும் மக்களுக்கு வழங்க முடியுமா?

எமது மண்ணின் புனித நாளாகிய மாவீரர்நாள் நெருங்கி விட்டது. அதற்கு முன்னர், தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இது உங்களனைவரின் கைகளிலும், முடிவுகளிலுமே தங்கியுள்ளது. நீங்கள் எடுக்கப் போகும் இந்த முடிவு, தமிழரின் வரலாற்றில் முக்கிய மாற்றமாக அமையும். அதுமட்டுமல்லாது இதுவரை காலமும் நீங்கள் செய்த சாதனைகளும் அர்ப்பணிப்புகளும் போற்றப்படும் காலம் உருவாகும். நீங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கௌரவத்துடன் மக்கள் மத்தியில் நடமாட முடியும்.

ஆனால் இதனை நீங்கள் செய்யத் தவறுவீர்களேயானால், நீங்கள் கடந்த காலத்தில் செய்த சாதனைகளுக்காகவும் தியாகங்களுக்காகவும் இனிமேலும் யாரும் உங்களை மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமன்றி மக்கள் உங்களைத் தூக்கி எறியும் காலம் மிக விரைவில் வரும். வரலாறு உங்களைப் பழிக்கும். உங்கள் சந்ததிகளுக்கும் அந்த அவப்பெயர் தொடரும். இதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் கடந்தகால வரலாறு உங்களுக்குக் கூறி நிற்கும் படிப்பினையாகும். பிரிவினைகளை மறந்து தன்முனைப்பைத் துறந்து ஒன்று திரண்டு பொது எதிரிக்கெதிராகப் போராட வரும்படி உங்களனைவருக்கும் இத்தால் அறைகூவல் விடுக்கின்றோம்.

ஓட்டுமொத்தத்தில் ஒரு அணி தனது எதிரணயிடம் சரணா கதி அடைந்து ஐயோ குளப்பாதீங்கோ நீங்கள் குளப்பினால் வருடத்திற்கு ஒருமுறை வாற வருமானம் நின்று போயிடும். வாங்கோ உங்களுக்கும் தேவையான பங்கை தாரோம் என்ற இந்த செய்தியை மக்கள் எவ்வாறு விளங்கிக்கொள்ளப்போகின்றார்கள்.


'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' மாம்

இறுதியாக ஒன்றுபட்ட நின்று சிங்களத்தின் சதியை முறியடிப்போம் என இவ்வறிக்கைக்கு தலையங்கம் இடப்பட்டதை விட

ஒன்றுபட்டு நின்று தமிழ் மக்களின் பணத்தை கொள்ளையடிப்போம் என தலையங்கமிட்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் .


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com