Friday, November 16, 2012

பிரான்ஸ் பாரிசில் இரு தமிழர்களைக் கடத்தியதாக பாகிஸ்தானியர் நால்வர் கைது…!!!

புலிகளின் உள்வீட்டுக்கொலையின் பின்னணியா?

புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பரிதி படுகொலை செய்யப்பட்டதன் பின், இரு தமிழர்கள் நால்வரைக் கொண்ட பாகிஸ்தானிய குழுவினரால் கடத்தப்பட்டு அடித்து உதைக்கப்பட்டுள்ளர்கள்.

மேற்படி சம்பவம் பாரிஸ் நகரத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் நெடுஞ்ச்சாலையில் கடந்த வார இறுதி நாளில் நடந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர் நால்வரும் செவ்வாய்க்கிழமையன்று Paris suburb of Bobigny நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் பிணை மறுக்கப்பட்டு தொடந்தும் காவலில் வைக்கப்பட்டுள்ளர்கள்.

மேற்படி பாகிஸ்தானிய நால்வருடன் கூடிய, கடத்தப்பட்ட இரு தமிழரும் கடந்த வெள்ளியன்று இரவு A6 motorway just north of Lyon இல் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், முறையே 25, 32 வயதுடைய இரு தமிழரும் அடிகாயங்களுடன் காணப்பட்ட நிலையில், வேற்று மொழிகள் பேசிய நிலையில் Lyon காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்படதாக போலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

பின்பு கைது செய்யப்பட்ட அறுவரும் Bobigny இற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தமிழர் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானிய நால்வரும் சட்டவிரோத நடவடிக்கைகள், தாக்குதல், ஆயுதம் பாவித்தமை ஆகியவற்றிக்காக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் செறிந்து வாழும் பாரிஸ் நகரில் கடந்த கிழமை கானல் நீரில் விடுதலைப் போராட்டம் நடாத்தி… தாயகத்தில் நீர்மூலமாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும்… தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினரும்… செயற்பாட்டாளருமான பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) (Nadarajah Matheenthiran alias Parithy a.k.a Regan, head of the LTTE front in France, Tamil Coordinating committee(TCC) பேரூந்து நிலையம் ஒன்றில் வைத்துக் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானியரும் ஓர் வளரும் இனமாக உள்ள நிலையில் இக்கடத்தல் இடம்பெற்றுள்ளது.

மேலும் தாயகத்தில் நீர்மூலமாக்கப்பட்ட புலிகளின் புலம் பெயர் நெடியவன் அணி தளபதி பரிதி பாரிஸில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கொலைசெய்யப்பட பருதியின் கொலையில் சம்பந்தப்படவர்கள் என்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும்… 5000 யுரோ ஊதியமாக பெற்றார் என்றும்… இக் கொலையில் பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்பு உள்ளதாக பிரான்ஸ் தமிழ் அமைப்பு ஒன்று அறிக்கை விட்டுள்ள நிலையிலும்… படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று பருதியின் மகள் குற்றஞ்சாட்டி, துப்பாக்கிச்சூட்டில் திறன்வாய்ந்தவர்களே தனது தந்தையைக் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்து, இந்த படுகொலைக்கு இலங்கை முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும் என்றும் பரிதியின் மகள் குறிப்பிட்டுள்ள நிலையில், புலம்பெயர் புலி அனுதாபிகளினால் தன்னையும்… தன் கட்சியையும்… வளர்க்கும்… November மாதத்தை மாவீரர் மாதமாக்கிய நெருப்புத் தமிழன் சீமான் இதுவரை இரங்கலோ… கண்டனமோ… செலுத்தாது பல சந்தேகங்களைக் கிளப்புககின்ற நிலையில் பாகிஸ்தானியர்களால் இக்கடத்தலும் நடைபெற்றுள்ளது.

இதேநேரம் அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராடத்தை தொடரப்போவதாக சூளுரைக்கும் நெருப்புத் தமிழன் சீமான் புலி சார் புலம்பெயர் தமிழரின் நிதி ஆதரவில் தங்கியிருக்கும் நிலையில், புலம்பெயர் தமிழரின் நிதியை தம்வசப்படுத்தியுள்ள நெடியவன் குழுவினரின் பணப்பட்டுவாடாவில், முதலீடுகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அறியப்படும் நிலையிலும், தமிழிற்கு கார்த்திகை மாதம் தவிர்ந்து, ஆங்கில மாதம் November மாதத்தை மாவீரர் மாதம் ஆக்கி கொண்டாடும் நிலையிலும், கடைசி யுத்தத்தில் தப்பியோடிய புலி உறுப்பினர்கள் முக்கியமாக தமிழ் நாட்டிலும், வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்த நிலையிலும் சீமானின் மாவீரர் November மாதத்தை வலுச்சேர்க்கும் நிலையில் இக்கொலை, மற்றும் கடத்தல் நடைபெற்றுள்ளது பல கோணங்களில் பல சந்தேகங்களை கிளப்புகிறது.

அடுத்த குறி யார்…???..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com