Thursday, November 8, 2012

இந்திய அணியைச் சமாளிக்க டிராவிட்டின் துடுப்பாட்டம் பார்க்கும் இங்கிலாந்து வீரர்கள்

அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண் இந்தியாவிற்கு வந்துள்ளது. இவ்விரு அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வருகிற 15ம் திகதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து அணி 2 பயிற்சி ஆட்டங்களில் ஏற்கனவே ஆடியுள்ளது.

இந்நிலையில் கடைசி பயிற்சி ஆட்டம் நாளை அகமதாபாத்தில் நடக்கிறது. அரியானா அணியை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

இதற்கிடையே சுழற்பந்து வீச்சில் இங்கிலாந்து அணி திணறும் என்பதால் இந்திய அணியில் அஸ்வின், ஓஜா, ஹர்பஜன்சிங் ஆகிய 3 முதன்மை சுழற்பந்து வீச்சாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முதல் 2 பயிற்சி ஆட்டங்களில் சரியான சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படவில்லை.

இங்குள்ள நிலைமைக்கு தகுந்தவாறு இங்கிலாந்து வீரர்கள் முதலிலேயே ஆட்ட நுணுக்கங்களை கற்று விடக்கூடாது என்பதற்காகவே இந்த தந்திரத்தை தெரிவுக் குழுவினர் கையாண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் வீடியோக்களை பார்த்து இங்கிலாந்து அணியினர் ஆய்வு செய்துள்ளனர்.

சுழற்பந்து வீச்சுக்கெதிராக டிராவிட் சிறப்பாக ஆடக்கூடியவர். அவரது பாடி லாங்க்வேஜ், ஷாட்கள் அடிக்கும் விதம் என்று பலவற்றையும் இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர்.

எதிர்வரும் தொடரில் இங்கிலாந்து அணியின் நடுவரிசை துடுப்பாட்ட வீரர்களான இயான்பெல், ட்ரோட், பீட்டர்சன், மோர்கன், பிரையர் ஆகியோர் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கெதிராக எப்படி ஆடுகிறார்கள் என்பதை பொறுத்தே அணியின் முடிவு அமையும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com