Wednesday, November 14, 2012

பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணைக்குழு அறிவிப்பு

பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றப்பிரேரணை தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட 11 பேர் அடங்கிய தெரிவுக்குழுவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.இன்று முற்பகல் நாடாளுமன்றம் கூடியபோதே அவர் இக்குழுவை அறிவித்துள்ளார்.

11 பேரடங்கிய நாடாளுமன்ற தெரிவுக்கு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் இக்குழுவில் தவிர நிமல் சிறிபால டி சில்வாஇ சுசில் பிரேமஜயந்தஇ ராஜித்த சேனாரத்னஇ டிலான் பெரேராஇ விமல் வீரவங்சஇ நியோமல் பெரேரா ஆகிய அமைச்சர்கள் ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்களாக பணியாற்றவுள்னதோடு எதிர்கட்சி சார்பாக ஜோன் அமரதுங்கஇ லக்ஷ்மன் கிரியெல்லஇ ஆர். சம்பந்தன் மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் விசாரணைகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 117 ஆளும் தரப்பு எம்.பி.க்களின் கையொப்பத்துடன் கூடிய குற்றப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணைகள் அனைத்தும் ஒருமாத காலப்பகுதியினுள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை பிரதம நீதியரசருக்கு எதிரான இச்செயலால் சட்டத்தரணிகள் கடும் கடுப்பாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com