சீனாவிலிருந்து ஏவப்படவிருந்த செயற்கைகோள் தற்காலிகமா நிறுத்தம்
சீனாவின் உதவியுடன் இன்று வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவிருந்த தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) ஐந்து நாட்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலை பொறியியலாளர் ரோஹித ராஜபக்ஷ இன்று வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், சீரற்ற காலநிலை காரணமாகவே செயற்கைக்கோளை ஏவுவதை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து இன்று ஏவப்படவிருந்த செய்மதிக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்தார்.
இந்த முயற்சி ஒரு தனியார் நிறுவனம் முன்னெடுத்ததாகும். இதில் நாம் சம்பந்தப்படவில்லை.
ஆனால் இந்த கம்பனி இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு செய்மதி சேவைகளை வழங்க அனுமதி கேட்டு தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்துள்ளது. நாம் இன்னும் இதற்கு அனுமதி வழங்கவில்லை என்றார்
இச்சம்பவம் தொடர்பில் விஞ்ஞான விவகார சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி திஸ்ஸவிதாரண தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹிதவினால் ஆதரவுடனேயே இச்செய்தி ஏவப்படவுள்ளது. இத்திட்டத்திற்கும் அரசாங்கம் தனது ஈடுபட்டை விலக்கிக்கொண்டுள்ளது என்றார்.
0 comments :
Post a Comment