வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து 'நீலம்' புயலாக மாறிஇ இலங்கை இந்திய கடற் கரையோரங்களைத் தாக்கியிருந்ததது.இதன் காரணமாக கடலோரபிரதேசங்களில் பலத்த மழை பெய்ததுடன் வீடுகள் குடும்பங்கள் பெரும் சோகத்தை சந்தித்தன.
பின்னர் அந்தப் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில கடலோர மாவட்டங்களை நோக்கி சென்றதால் அங்கு இன்னும் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கையில் 'நீலம்' புயல் கரை கடந்த பின்னர்இ சில தினங்களாக வானிலையில் எந்த மாற்றமும் இல்லை.
தற்போது வங்கக் கடலில் இலங்கை அருகே மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புதிதாக உருவாகியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில்; பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
0 comments :
Post a Comment