Saturday, November 24, 2012

தீவிரவாதி ஓசாமாவின் உடலை அமெரிக்கா எப்படி கடலில் எறிந்தது -வெளியானது அதிர்ச்சி தகவல்

ஒசாமா பின்லேடனை அமெரிக்காவின் சிறப்பு படைப்பிரிவான நேவிசீல் படைவீரர்கள் சுட்க்கொன்ற பின்னர் அவரது உடல் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டது என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.கொல்லப்பட்ட சடலத்தை அமெரிக்கா எப்படி கடலில் போட்டது என்பது குறித்து இமெயில்கள் மூலம் வெளியான அதிர்ச்சிக்கரமான தகவல் மூலம் தெரியவருகையில்

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை கடந்தாண்டு மே மாதம் அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். ஆனால் பின்லேடனின் சடலத்தை உலகிற்கு காட்டாத அமெரிக்கா, கடலில் புதைத்து விட்டதாக தெரிவித்தது.

பின்லேடனின் புகைப்படங்களை கூட வெளியிடவில்லை. இந்நிலையில் இரகசிய மின்னஞ்சல்கள் மூலம் ஒசாமாவின் சடலம் எவ்வாறு புதைக்கப்பட்டது என்பது குறித்து அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதும், அவரது உடலை கைப்பற்றிய நேவி சீல் வீரர்கள் உடலை முழுவதுமாக தண்ணீர் ஊற்றிக் கழுவித் துடைத்துள்ளனர். பின்னர் அதை ஒரு வெள்ளை ஷீட்டில் வைத்து கட்டியுள்ளனர். அதன் பின்னர் பெரிய பேக்கில் உடலைப் போட்டு பார்சலாக்கியுள்ளனர் என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

பின்லேடன் உடலை பார்சல் செய்யும் பணியிலும், பின்னர் கடலுக்குக் கொண்டு செல்லும் பணியிலும் பெட்எக்ஸ் பார்சல் நிறுவனத்தை பயன்படுத்தியுள்ளனர். உடலைப் பார்சல் செய்த பின்னர் சாலை மார்க்கமாக லாரியில் வைத்து அமெரிக்க முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மற்றொரு மின்னஞ்சலில், பின்லேடனின் உடல் அடக்கம் குறித்த விவரம் சிலருக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. அதில் இஸ்லாமிய முறைப்படி பின்லேடன் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசாமாவின் உடலை பேக்கிங் செய்த பின்னர் ஒரு இராணுவ அதிகாரி இஸ்லாமிய மத வாசகங்களை ஆங்கிலத்தில் படித்தார்.

அதை ஒரு உள்ளூர்க்காரர் உதவியுடன் அரபியில் மொழி பெயர்த்துச் சொல்லப்பட்டது. அதன் பின்னர் தயாராக வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியில் உடலை வைத்து ஆணி அடித்து அதை கடலுக்குக் கொண்டு சென்றோம். அங்கு கடலில் அந்த சவப்பெட்டி போடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் அமெரிக்க பாதுகாப்புப் படை கூட்டு தலைமை அதிகாரி மைக் முல்லன், அமெரிக்க மத்திய கூட்டுப் பாதுகாப்புப் படை அதிகாரி ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com