Thursday, November 15, 2012

ச.வி கிருபாகரன் இலங்கை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையா?

தமிழர் மனித உரிமைகள் மையம் என்ற பெயரில் பிராண்சிலிருந்து அறிக்கைகள் விடுத்து கொண்டிருப்பவர் ச.வி கிருபாகரன். இவர் இறுதியாக விடுத்த அறிக்கை பிராண்சில் சுட்டுக்கொல்லப்பட்ட புலிகளின் பிராண்சுக்கான பொறுப்பாளரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளருமான பருதி அல்லது றேகன் எனப்படுகின்ற நடராசா மதிந்திரனுக்கான அஞ்சலியாகும்.

பிராண்சில் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இக்கொலை தொடர்பாக கிருபாகரன் விடுத்துள்ள அறிக்கையில் 'பரூதியின் படுகொலையை, சிறிலங்கா ஜனதிபதி மகிந்த ராஜபக்சா, அவரது சகோதரர் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும், சிறிலங்காவின் இராணுவ புலனாய்வு பிரிவினரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதனை இங்கு பல ஆதராங்களுடன் கூறவிரும்புகிறோம்.' எனத்தெரிவித்துள்ளார்.

புலிகளியக்கத்தின் சொத்துக்களை பிரித்தெடுப்பதிலும் அதனை அனுபவிப்பதிலும் ஏற்பட்டுள்ள அதிகாரப்பிணக்கின் பின்னணியிலேலே இக்கொலை இடம்பெற்றுள்ளது என யாவரும் அனுமானித்திருக்கின்ற நிலையில் இலங்கைப் புலனாய்வுத்துறையினரே இக்கொலையை மேற்கொண்டுள்ளனர் என கிருபாகரன் தெட்டத்தெளிவாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசு மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை கிருபாகரன் முன்வைப்பது இது முதற்தடவை அல்ல.

இலங்கையிலே ஊடக சுதந்திரம் எனும் பெயரால் எல்லை கடந்து சென்று இவ்வாறான பல்வேறுபட்ட அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் பலர் நீதியின் தீர்ப்புக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாக நாட்டை விட்டே ஓடியுள்ளனர் என்பது நாம் யாவரும் அறிந்த கதை. ஆனால் கிருபாகரனின் செயற்பாட்டினை இலங்கை அரசு கையாளும் விதம் மிகவும் மென்மையானதாகவே இருக்கின்றது. இலங்கையிலே சிங்களப்பத்திரிகையாளர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை வைக்கின்றபோது அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்கின்ற அரச தரப்பினர் ஏன் கிருபாகரன் போன்றோரின் சட்டவிரோத மனிதநேயமற்ற, உண்மைக்கு புறம்பான, குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்று சென்று தண்டனை பெற்றுக்கொடுப்பதில்லை.

கிருபாகரன் போன்றோர் எல்லை மீறிய வாந்திகளை பரப்பி தமிழ் மக்களை வன்முறைப்பிரியர்களாக வைத்திருக்கின்றமையை இலங்கை அரசு விரும்புகின்றதா? அதன்பொருட்டு இவர்கள் மேற்கொள்கின்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களை கண்டும் கணாதவர்களாக இருக்கின்றதா?

இலங்கை அரசு தமிழ் மக்களை நேசிக்கின்றதாயின் , அது தமிழ் மக்களுடன் ஓர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைகின்றதாயின் செய்யப்படவேண்டிய முதலாவது பணி மக்களை தவறாக வழிநடாத்தும் நோக்கத்துடன் வதந்திகளை பரப்புகின்றவர்களை இனம் கண்டு அவர்களை நீதியின் முன் கொண்டுவரவேண்டும்.

பயங்கரவாதம் இலங்கையிலே ஒழிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தமிழ் மக்களை தொடர்ந்தும் புலிகள் எனும் மாயை வலையினுள் வைத்திருக்க முயன்று கொண்டிருக்கின்ற கிருபாகரன் போன்றோருக்கு எதிராக பிராண்ஸ் தூதரகம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இவர்களது செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதுடன் இவர்கள் இத்தனை காலமும் விடுத்திருந்த அறிக்கைகள் யாவும் போலியானதும் உண்மைக்கு புறம்பானதும் என்பதனை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும்.

1 comments :

Anonymous ,  November 16, 2012 at 7:52 PM  

தாவடி சுதுமலைய் சேர்ந்த இந்த குண்டடி வாசிகசாலை கள்ளன் இந்த கிருபான்ற கதையை ஒருவரும் நம்ப மாட்டினம். இவன் செய்த திருகு தாளங்கள் கொஞ்சமா ? 70 - 80 ல ஒரு பெண்களையும் போக விட மாட்டான் இந்த குடி கார பாவி, இப்ப இவர் பெரிய மனித நேய வாதியாம். இது தான் கலி காலம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com