அசாருதீன் மீதான ஆயுட் கால தடையை நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு
உலகப்பிரபலங்களில் ஒன்றான இந்திய கிரிக்கெட் வீரர் மொஹம்மது அசாருதீன் மீதான ஆயுட் கால தடையை நீக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட அசாருதீனுக்கு, கிரிக்கெட் விளையாட பிசிசிஐ ஆயுள் தடை விதித்தது.
இதனை எதிர்த்து அசாருதீன், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம்,அசாருதீன் மீதான ஆயுள் கால தடையை நீக்குமாறு இன்று பிசிசிஐக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அசாருதீன் மீதான ஆயுட்கால தடை நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ-க்கு எதிராக வழக்கு இல்லை இதனிடையே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அசாருதீன்,தமக்கு ஆயுட் கால தடை விதித்தது தொடர்பாக பிசிசிஐ உள்ளிட்ட யார் மீதும் வழக்கு தொடரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment