வைத்தியசாலையிலுள்ள கம்பளை ஜினராஜ கல்லூரி மாணவிகள் தேறிவருகின்றனர்
ஒவ்வாமை காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பளை ஜினராஜ கல்லூரி மாணவிகளின் உடல் நிலை தேறி வருகின்றது என கம்பளை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் வீர பண்டார தெரிவித்துள்ளார்.
கம்பளை ஜினராஜ மகளிர் கல்லூரியின் நூற்றுக்கணக்கான மாணவிகள், ஒவ்வாமை காரணமாக திடிரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுள் 425 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். சுமார் 120 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு வகை உண்ணிகள் காரணமாக, இந்த ஒவ்வாமை ஏற்பட்டதாக, தெரியவந்துள்ளது.
இதுவரை சகல மாணவிகளினதும் உடல் நிலை தேறி வருவதாக, கம்பளை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் வீர பண்டார தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஜினராஜ மகளிர் கல்லூரியை துப்பரவு செய்யும் பணிகளுக்கென, 3 நாட்களுக்கு பாடசாலையை மூடிவிட, தீர்மானிக்கப்பட்டுள்ளது. கம்பளை நகர சபையும், சுகாதார தரப்பினரும் இணைந்து, இப்பணிகளை மேற்கொள்கின்றன.
0 comments :
Post a Comment