Thursday, November 15, 2012

இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் : ஹாவ்கின்ஸ்

இங்கிலாந்தில் கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற இங்கிலாந்து - இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம்

என பிரபல பிரித்தானிய விளையாட்டு ஊடகவியலாளர் எட் ஹாவ்கின்ஸ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். Bookie Gambler Fixer Spy எனும் பெயரில் அவர் வெளியிட்டுள்ள புத்தகத்திலேயே இத்தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற இலங்கை - இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முடிவு முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும், இதில் இங்கிலாந்து வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இப்போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இங்கிலாந்து அணி 495 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தனது ஆட்டத்தை டிக்ளேஸ் செய்தது. 5ம் நாள் காலை மழை காரணமாக போட்டி குழம்பியிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடியுமென்றே பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய போது 24.4 ஓவரில் 82 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

இதே சமயம் இலங்கை வீரர்கள் தமது சம்பளம் 8 வாரங்களாக கிடைக்காத நிலையில் பெரும் நிதி நெருக்கடியில் இருந்ததாக ஹாக்கின்ஸ் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதனால் போட்டியை இலங்கை வீரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டதாக கூறியுள்ளார்.

தான் விளையாடிய அதி சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்று என இங்கிலாந்து அணியின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் இப்போட்டி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com