வெலிக்கடையில் உயிரிழந்தோர் 27 ஆக அதிகரிப்பு
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைக் காரணமாக மேலும் 11 சடலங்கள் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 16 சடலங்கள் நேற்றிரவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆறு சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் 11 சடலங்பக்ள இன்று சனிக்கிழமை காலை சிறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சிறைச்சாலைக்குள் மேலும் தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸாரும் சிறைக்காவலர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்படுகின்றது.
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது ஒரு சிறைக்காவலர் உள்ளடங்குவதாகவும் 13 பொலிஸார் 4 சிப்பாய்கள் உள்ளடங்களாக 43 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை, கலவரத்தின்போது தானியங்கி துப்பாகிகள் உட்பட 82 துப்பாகிகள் கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும். 70 இற்கும் மேற்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் சந்தரசிறி கஜதீர தெரிவித்தார்.
0 comments :
Post a Comment