Monday, November 19, 2012

சென்னை குழந்தையை ரூ.100க்கு விற்ற பெண் கைது

சென்னை கோயம்பேட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழந்தையுடன் சுற்றிய பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்ததில் தனது குழந்தையை ரூ.100க்கு விற்றபனை செய்த பரபரப்பு தகவலை இவர் தெரிவித்துள்ளார்.

இவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் மணலி என்ற இடத்தை சேர்ந்த செல்வி, குழந்தையை ரூ.100க்கு விற்றதாக கூறியுள்ளார்.இதனையடுத்து செல்வியையும் கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதங்களில் பீகார் மாநிலத்தில் வறுமையின் காரணமாக குழந்தையொன்றை ரூ.100க்கு விற்ற தாயை பொலிஸார் கைது செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

1 comments :

Anonymous ,  November 19, 2012 at 9:27 AM  

very good india, india is growing

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com