நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உடனடியாக நீக்கப்பட வேண்டும்
நீதித்துறை, தனது சுயாதீன தன்மை யை இழந்துவிட்டது என்றும், நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால் மக்களுக்கு பாரிய துன்பம் ஏற்பட்டுள்ளது என்றும், எனவே நாட்டின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தைச் சேர்ந்த மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இப்போது மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும், மஹிந்த சிந்தனையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும், சட்டம் ஒழுங்கை பேண வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment