இனியும் நோர்வே அரசு மௌனம் காத்திருக்கக் கூடாது
உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும் - நோர்வே பெற்றோர்கள்.
நோர்வேயில் வசிக்கும் வெளிநாட்டவர் களின் குழந்தைகளை நோர்வே பிரஜை களாக்கும் திட்டத்தில், நோர்வே அரசு குழந்தைகளையும் பெற்றோரையும் பிரித்து இரு சாராரையும் உளவியல் தாக்கத்துக்கு ஆளாக்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பினர், ஒஸ்லோவில் நடைபெற்ற சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரா ட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படு மானால் விளைவுகள் கடுமையானதாக இருப்பதுடன், பாரிய போராட்டம் வெடிப்பதைத் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் காப்பகங்கள் தவறிழைத்துள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ள நோர்வே அரசு, குழந்தைகளை உடனடியாக அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைப்பக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நோர்வேயின் அவ்விடயங்கள் ஊடகங்கள் வாயி லாக உலகளவில் வெளிவந்துள்ள நிலையில், பிள்ளைகளை காப்பகத்திடம் இழந்து நிற்கின்ற பெற்றோருக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புக்கள் திரண்டிருப்பதாகவும் தெரியவந்து ள்ளது.
சிறுவர் காப்பகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது குழந்தைகளை சந்திப்பதற்கு தமக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர், நீதிமன்றத் தீர்ப்புக்கள் வரும் வரையில் குழந்தைகள் தமது பெற்றோரை அவர்களது வீடுகளிலேயே சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளனர். அத்துடன், நோர்வே பிரஜைகளுக்கு இந்த நடை முறை அமுலில் இருப்பதாகவும் வெளிநாட்டவர்களுக்கு இது மறுக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.
சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இவ்வாறு சிறுவர் காப்பகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெற்றோர் தமது பிள்ளைகளைப் பிரிந்து விரக்தியில் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள பெற்றோர், இனியும் நோர்வே அரசு மௌனம் காத்திருக்கக் கூடாது காப்பக விவகாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment